செய்திகள் :

ரூ.15 கோடி பட்டுவாடா? - வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.5 கோடி கொண்டுவந்தாரா பாஜக தலைவர்?

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர பிரசாரம் செய்ததோடு அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தினமும் முழுபக்க விளம்பரமும் கொடுத்தது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறி தனியாகவும் முழுபக்க விளம்பரம் செய்தது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பார்வையாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகில் நாலாசோபாராவில் உள்ள ஹோட்டலில் பா.ஜ.க தேசிய செயலாளர் வினோத் தாவ்டே வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதற்காக ரூபாய் 5 கோடி கொண்டு வந்திருப்பதாக பகுஜன் விகாஸ் அகாடி தலைவர் ஹிதேந்திர தாக்குருக்கு பா.ஜ.க நண்பர்கள் சிலர் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அக்கட்சி தொண்டர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டலை சூழ்ந்து கொண்டனர்.

வினோத் தாவ்டே

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து வந்தனர். அவர்கள் வினோத் தாவ்டே தங்கி இருந்த ஹோட்டல் அறையில் சோதனை செய்தனர். இதில் 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் தாவ்டேயை சூழ்ந்து கொண்டு பணத்தை காட்டி பகுஜன் விகாஸ் அகாடி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். ஹோட்டல் அறையில் பணம் இருந்த கவர்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வினோத் தாவ்டே மீது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வினோத் தாவ்டே வெளியிட்டுள்ள செய்தியில், ``தேர்தல் நாளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கருதினால் அது குறித்து தேர்தல் கமிஷன் விசாரிக்கட்டும்'' என்றார்.

முன்னதாக வினோத் தாவ்டே ரூ.5 கோடியை வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதாக ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் பகுஜன் விகாஸ் அகாடி தொண்டர்கள் மோதிக்கொண்டனர். வினோத் தாவ்டே அறையை சோதனை செய்தபோது ரூ.15 கோடி பட்டுவாடா செய்யப்பட்டதற்கான டைரி ஒன்று சிக்கி இருப்பதாக ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டினார்.

இது குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள செய்தியில், ``ஒன்றும் இல்லாத உத்தவ் தாக்கரே பேக்கை சோதித்தார்கள். ஆனால் பணம் இருந்த பேக்கை சோதிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க தேர்தலில் பண பலத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறது. மகாராஷ்டிரா முழுக்க 800 கோடிக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் குறிப்பிட்ட `சமரச மையம்’ என்றால் என்ன?

நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்ததே. முதலில் ஜெயம் ரவி தாங்கள் பிரிந்து வாழ்வதாக அறிவிக்க, 'அது என்னுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவல்ல. என்னால் அவரைத் தொடர்ப... மேலும் பார்க்க

சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்; சிக்கன் ரைஸ்தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கோவையைச் சேர்ந்த எலினா லாரெட் என்ற 15 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து ப... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 2: ஒரிஜினல் ஐடியாக்காரன்; முதல் தொழிலிலே ரூ.180 கோடி பார்த்த அக்மார்க் வியாபாரி

Horizontal Progressஏற்கனவே இருக்கும் ஒரு வணிகத்தில் ஒரு அப்டேடட் வெர்ஷனை அல்லது கூடுதல் சேவைகளை அல்லது அதிக வசதிகளை களமிறக்குவது ஹரிசாண்டல் ப்ராகிரஸ். உதாரணத்துக்கு போர்டர் நிறுவனச் சேவைகளைச் சொல்லலாம... மேலும் பார்க்க

``ஆட்சிக்கு வந்தவுடன் அதானிக்கு ஆதரவான திட்டங்களை ரத்து செய்வோம்" - தாக்கரே கடைசி நேர பிரசாரம்

மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று முடிகிறது. உத்தவ் தாக்கரே மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால்... மேலும் பார்க்க

`எந்த முன்னாள் காதலனும் விரும்பும் சிறந்த விஷயம் அது’ - ஐஸ்வர்யா ராய் திருமணம் குறித்து சல்மான் கான்

2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிகை ஐஸ்வர்யா ராயும் காதலித்து வந்தனர். ஆனால் 2002-ம் ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட, அவர்கள் பிரிந்துவிட்டனர். இருவரும் பிர... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: TN-ன் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி `டு' இலங்கை தேர்தல்; இந்த வார கேள்விகள்!

தமிழ்நாட்டுக்கு முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்துப் பெண் நியமனம், ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஹரியானா வீரர் என இந்த வாரத்தில்... மேலும் பார்க்க