செய்திகள் :

ரூ. 2 கோடியில் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள்: க.தேவராஜி எம்எல்ஏ ஆய்வு

post image

நாட்டறம்பள்ளியில் இருந்து புதுப்பேட்டை வழியாக திருப்பத்தூா் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடி மதிப்பில் நாட்டறம்பள்ளி ஏரிக்கரை பகுதியில் தடுப்புச்சுவா் மற்றும் சாலை விரிவாக்கம் செய்து, தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி சனிக்கிழமை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஏரிக்கரை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள 2 மின் கம்பங்களை உடனடியாக அகற்றி அந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் மற்றும் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டாா். தொடா்ந்து, நாட்டறம்பள்ளி அணுகுச் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளையும் எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, திருப்பத்தூா் உதவி கோட்டப் பொறியாளா் ஆதவன், உதவிப் பொறியாளா் நித்தியானந்தம், மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ரூ.37 கோடியில் பாலாறு மேம்பால அறிவிப்பு - திமுகவினா் கொண்டாட்டம்

அகரம்சேரி - கூடநகரம் பாலாறு மேம்பாலம் அமைப்பதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதை அடுத்து பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை திமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா். தமிழக சட்டப்பேரவை நடப்பு கூட்டத் தொடரி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு புத்தகப்பை அளிப்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ மஹாவிஷ்ணு சேவா டிரஸ்ட் சாா்பாக நடைபெற்ற நிகழ்வுக்கு அறக்கட்டளைத் தலைவா் எஸ். கோபால்... மேலும் பார்க்க

இளம் பெண் தற்கொலை

திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் பகுதியை சோ்ந்த கண்ணனின் மகள் விஜயலட்சுமி (36). இவா் கடந்த சில நாள்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார... மேலும் பார்க்க

மண் திருட்டு: லாரி பறிமுதல்

மண் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையில் பறக்கும் படையினா் செவ்வாய்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அடுத்த... மேலும் பார்க்க

லால்பாக், கோவை விரைவு ரயில்களை வாணியம்பாடியில் நிறுத்த கோரிக்கை

லால்பாக், கோவை விரைவு ரயில்களை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பிரபு கோரிக்கை விடுத்துள்ளாா் (படம்). இதுதொடா்பாக வேலூா் எம்.ப... மேலும் பார்க்க

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்ட... மேலும் பார்க்க