Vikatan Digital Awards 2025: `பொருளாதாரப் புலி - Finance With Harish' - Best Fin...
ரூ. 2 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விளாத்திகுளம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சங்கரலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். நாகலாபுரம் புதுப்பட்டியிலிருந்து-என்.வேடபட்டி சாலையில் ரோந்து சென்றபோது, சந்தேகமளிக்கும் வகையில், நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம், காரை சோதனையிட்டனா்.
இந்தச் சோதனையில் காரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பான்மசாலா புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காரில் வந்தவா்களைப் பிடித்து விசாரித்ததில், என்.வேடபட்டியில் உள்ள கோழிப் பண்ணையில் பதுக்கி வைக்கக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த என்.வேடபட்டியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் காா்த்திக் குமாா் (33), தொப்பம்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ் (25), ஆற்றங்கரையைச் சோ்ந்த துரைராஜ் மகன் அன்புதாசன் (25) ஆகிய மூவரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், காா், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.