பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது
பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.
துபையில் இருந்து பெங்களூரு திரும்பியபோது ரூ. 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக கன்னட நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைதுசெய்துள்ள நிலையில், தங்கம் கடத்தியதாக பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.
ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில், துபையில் இருந்து மாா்ச் 4-ஆம் தேதி பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளியை சோதனை செய்தபோது, அவரது சட்டையில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ரூ. 3,44,38,796 மதிப்புள்ள சுமாா் 4 கிலோ தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.
இதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளியை சுங்கவரித் துறை அதிகாரிகள் கைதுசெய்து, தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். மாற்றுத்திறனாளியின் பெயரை வெளியிட சுங்கவரித் துறை மறுத்துவிட்டது.