செய்திகள் :

ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

post image

புதுதில்லி: நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.56 ஆயிரம் கோடி முன்கூட்டியே தவணை செலுத்தி, ரூ.1,200 கோடி வட்டியை மிச்சப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மொத்த கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் முடிவில் சுமார் ரூ.2.76 லட்சம் கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை வருமானத்திலிருந்து சுமார் ரூ.15,700 கோடி முன்கூட்டியே செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் தேசிய சிறு சேமிப்பு நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வுக்கு ரூ.10,000 கோடி ஆக மொத்தம் ரூ.40,000 கோடி முன்கூட்டியே கடன் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தனது கடன் பொறுப்பை வெற்றிகரமாக குறைத்து வருகிறது என்று அந்த அரசு அதிகாரி.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 2024-25 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.1.68 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

பங்குச்சந்தை இன்று(ஜன. 8) கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை78,319.45 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12.50 மணிக்கு சென்செக்ஸ் 636.50 புள்ளி... மேலும் பார்க்க

இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்!

இந்தியாவில் 300 கோடி டாலரை (ரூ. 2.5 ஆயிரம் கோடி) முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சா... மேலும் பார்க்க

2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!

புதுதில்லி: டிஜிட்டல் வாலட் நிறுவனமான, மொபிகுவிக், 2024 செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ரூ.3.59 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.ஒன் மொபிகுவிக் சிஸ்டம்ஸ் லிமிடெட் அதன் ஒதுக்கீட்டு விலையுடன் ஒப்... மேலும் பார்க்க

2024 நவம்பரில் 8 டன் தங்கத்தை வாங்கி குவித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் நவம்பர் மாதத்தில் மட்டும் 53 டன் தங்கத்தை வாங்கியுள்ள வேளையில், இந்திய ரிசர்வ் வங்கி 2024 நவம்பரில் மட்டும் எட்டு டன் தங்கத்தை வாங்கியுள்ளது என்று உலக தங்க கவ... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகள் வெளியேறி வருதவதும், பங்குச் சந்தையில் நிலவும் சுணக்கம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு வலுப்பெற்று வரு... மேலும் பார்க்க

நேற்றைய சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: நேர்மறையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், இன்றைய பங்குச் சந்தைகள் உறுதியான குறிப்பில் தொடங்கி, முன்னேறியதால் உயர்ந்து முடிந்தது. அதே வேளையில், இரண்டாவது பாதியில் முதலீட்டாளர்கள் லாபத்தை ப... மேலும் பார்க்க