செய்திகள் :

ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி

post image

ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் இ. பெரியசாமி வெளியிட்டார்.

அதில் முக்கியமாக, ஊரகப்பகுதிகளில், மக்கள் உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை எளிதில் பெறும் பொருட்டு, 500 முழுநேர நியாய விலைக்கடைகள் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அவ்வூராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திட ஏதுவாக, தற்போது வழங்கப்படும் மாநில நிதிக்குழு பகிர்மான நிதியுடன் சிறப்பு நிதியாக ரூ. 10 கோடி மானியமாக வழங்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள பள்ளிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், நூலகக் கட்டடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல்வேறு அலுவலக மற்றும் பொது பயன்பாட்டுக் கட்டடங்களை புனரமைத்து முறையாகப் பராமரிப்பதற்காக, விரிவான பராமரிப்புக் கொள்கை (Building Maintenance Policy) வகுக்கப்படும்.

2025-26 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதற்கென மாநில மானியத்திலிருந்து ரூ. 100 கோடி நிதிக்குழு ஒதுக்கீடு செய்யப்படும் உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.

இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள... மேலும் பார்க்க

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்த பணிகளில் சுகாதாரத் துறை

சென்னை: தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. கருப்பை வாய... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க