செய்திகள் :

ரெடியா? 5,000 திரைகளில் வெளியாகும் கூலி!

post image

கூலி திரைப்படம் வெளியாகும் திரைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினியின் படங்களில் அதிக ஆவலைத் தூண்டும் படமாக உருவான கூலி முதல் நாளிலேயே பெரிய வசூலை நிகழ்த்தலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் இந்தியா உள்பட 100 நாடுகளில் சேர்த்து 4500 - 5000 திரைகளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினியின் திரைப்படங்களில் அதிக திரைகளில் வெளியாகும் முதல் படம் என்கிற சாதனையையும் கூலி அடைந்துள்ளது.

இதையும் படிக்க: நம் சூப்பர் ஸ்டாரை பாசத்துடன் பாராட்டுகிறேன்: கமல் ஹாசன்

worldwide number of screens for actor rajinikanth's coolie movie

இப்படி பண்ணிட்டீங்களே தலைவா! கூலி எப்படி இருக்கு?

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் என்றில்லை திரைப்படங்களை ரசித்துப் பார்க்கும் பலருக்கும் ரஜினி படமென்றால் ஒரு கொண்டாட்ட மனநிலைதான். ஒன்றல்ல, ... மேலும் பார்க்க

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் ரஜினிகாந்த்!

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களை தன்வயப்படுத்தும் மந்திரங்களை அறிந்த தெரிந்த மாய கலைஞன் அவர். 80 -கள் துவங்கி 90 -களின் இறுதிவரை தமிழகத்தின் பண்டிகை நாள்களை மேலும் சிறப்பானதா... மேலும் பார்க்க

ரஜினி 50! ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

அபூர்வ ராகங்கள் தொடங்கி கூலியுடன் திரைத் துறையில் 50 ஆண்டுகளை, அரை நூற்றாண்டை நிறைவு செய்கிறார். இத்தனை வயதிலும் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா? முடியும் என்றே இதுவரையிலும் சாதித்துக் கொண்டிரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெளியானது கூலி!

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கூலி திரைப்படம் வெளியானது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில்... மேலும் பார்க்க

வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்த கூலி!

கூலி திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவு... மேலும் பார்க்க