ரெட்ரோ முதல் பாடல் தேதி!
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.
ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: வா வாத்தியார் என்ன ஆனது?
மே. 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/vf61ldr9/GjgTgnyXkAAOc6T.jpg)
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ’கண்ணாடி பூவே’ காதலர் நாளை முன்னிட்டு பிப். 13 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.