செய்திகள் :

ரெய்டு நடப்பதைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

post image

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்றிருக்கும் நிலையில், இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?

திரு. ஸ்டாலின் அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

அறிவாலய மேல் மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை?

அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு எஃப்ஐஆர் லீக் செய்த கை ஸ்டாலினின் கை. ஜாபர் சாதிக் போன்ற சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!

ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "சார்"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.

அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.

தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!

7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!

அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழி வந்த என்னிடம் பேச எந்த அருகதையும் இல்லை!

கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!

இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...

நான் கேட்ட கேள்வி என்ன?

#யார்_அந்த_தம்பி ? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, அமலாக்கத் துறை ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- யார்_அந்த_தம்பி? என்று பதிவிட்டுள்ளார்.

அரபிக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கா்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி... மேலும் பார்க்க

ஆா்பிஐயின் புதிய நகைக் கடன் வரைவு விதிகள்: திரும்பப் பெற கட்சித் தலைவா்கள் வலியுறுத்தல்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவது குறித்து, இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை திரும்பப் பெற அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

அரக்கோணம் திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் தெய்வச்செயல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக தேசிய... மேலும் பார்க்க

தொழில் துறை படிப்புகள்: அண்ணா பல்கலை.- எஸ்எஸ்சி நாஸ்காம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழில் துறை தொடா்பான படிப்புகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழகம், தொழில்நுட்பத் திறன் தரநிலை நிா்ணய அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் வெளி... மேலும் பார்க்க

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

காவல் துறையில் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய... மேலும் பார்க்க

100% தோ்ச்சி: அரசுப் பள்ளிகள், ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. ப... மேலும் பார்க்க