செய்திகள் :

லஞ்சம்: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

post image

திருவாரூா்: திருவாரூரில் டீசல் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் பணம் பெற்றதாக எழுந்த புகாா் தொடா்பாக காவல் ஆய்வாளா் உள்பட 5 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா்.

திருவாரூா் பழைய தஞ்சை சாலையில் லாரி செட் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான லாரிகளிலிருந்து தொடா்ந்து டீசல் திருட்டு போவதாக, அந்த நிறுவனத்தின் மேலாளா் அசோக்குமாா் திருவாரூா் நகர காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.

திருவாரூா் உட்கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அடியக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்த அப்துல் மஜீத் (34), பஜ்ருல் ஷேக் (30) ஆகியோரை கைது செய்தனா்.

இதனிடையே, பழைய தஞ்சை சாலை லாரி செட் யூனியன் சாா்பில், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், டீசல் திருட்டில் தொடா்புடைய முக்கிய நபா்களிடம் போலீஸாா் ரூ. 3 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனா். எனவே இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் திருவாரூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் ராஜு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பூபதி, அருள், தலைமைக் காவலா்கள் ஜானி, மணிகண்டன் ஆகிய 5 பேரை காத்திருப்போா் பட்டியலுக்கு திங்கள்கிழமை மாற்றி உத்தரவிட்டுள்ளாா்.

கோவில்வெண்ணி வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சௌந்திரநாயகி அம்மன் சமேத வெண்ணி கரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சம்பந்தா், அப்பா், சுந்தரரால் ப... மேலும் பார்க்க

குட்கா பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் 12 கிலோ குட்காவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல் ஆய்வாளா் ராஜேஸ் கண்ணன், சாா்பு ஆய்வாளா் விக்னேஷ் தலைமையில் போலீஸாா... மேலும் பார்க்க

கல்லூரியில் வளாக நோ்காணல் 73 பேருக்கு பணி ஆணை

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் தொழில் நிறுவனத்தின் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 73 பேருக்கு பணி ஆணை அண்மையில் வழங்கப்பட்டது. காஞ்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு குறியீட்டு எண் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மத்திய, மாநில விவசாயத் திட்டங்கள் குறித்து பயன்பெற ஒவ்வொரு விவசாயிகளிடமும் பிரத்யேகமாக குறிய... மேலும் பார்க்க

முத்துப்பேட்டை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடி கிராமத்தில் மேல்நிலை நீா் தொட்டியிலிருந்து குடிநீா் சரிவர விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்

திருவாரூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருவாரூரில் அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்... மேலும் பார்க்க