சேஸிங்கில் புதிய வரலாறு..! 352 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸ்திரேலியா அபார...
லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை
காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் கடந்த 26.11.2009 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற செளரிராஜன் என்பவரைப் பிடித்து வாகனத்தில் வேகமாக வந்ததாகக் கூறி, அவரது அடையாள அட்டையை பறிமுதல் செய்துள்ளாா் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக இருந்த தங்கராஜ்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், அதைக் கொடுக்க விருப்பம் இல்லாத செளரிராஜன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உதவி ஆய்வாளா் தங்கராஜை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வசந்தகுமாா், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜின் குற்றத்தை உறுதி செய்ததுடன், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.