செய்திகள் :

லண்டனுக்கு குடியேறும் விராட் கோலி..! ஓய்வை அறிவிக்கிறாரா?

post image

விராட் கோலி விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விராட் கோலி (36) டி20 உலகக் கோப்பையுடன் தனது டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார்.

தற்போது, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் விரைவில் லண்டனுக்கு குடியேறுவாரென அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியதாவது:

தனது குடும்பத்தாருடன் விராட் கோலி லண்டனுக்கு குடியேற இருப்பது உண்மைதான். விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுவார். கிரிக்கெட்டினை தவிர்த்து விராட் கோலி அதிகமாக தனது குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறார் என்றார்.

விராட் கோலிக்கு வாமிகா (பெண்), அகாய் (ஆண்) என இரண்டு குழந்தைகள் இருகிறார்கள்.

சமீபத்தில் லண்டனில் கோலி இடத்தை வாங்கியிருந்தார். அடிக்கடி லண்டனுக்கு சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி டெஸ்ட்டில் 9,166 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 13,906 ரன்களும் குவித்துள்ளார்.

சச்சினுக்குப் பிறகு அதிகளவில் கொண்டாடப்பட்டவர்களில் விராட் கோலியும் ஒருவராக இருக்கிறார். சமீபகாலமாக சரியாக விளையாடாமல் இருக்கும் கோலி பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறார்.

ஏற்கனவே, டி20யில் ஓய்வை அறிவித்த கோலி விரைவில் சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியுற்றால் ஓய்வு பெறலாம் என பலரும் கூறிவரும் நிலையில் லண்டனுக்கு குடியேறுவாரென செய்தி கோலி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் ஹசாரே டிராபி: உ.பி. அணியை வழிநடத்தும் ரிங்கு சிங்!

விஜய் ஹசாரே தொடரில் உத்தரப் பிரதேச அணிக்கு ரிங்கு சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடிவரும் ரிங்கு சிங் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் ... மேலும் பார்க்க

அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசன்! 15% அபராதம்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அவுட்டான விரக்தியில் ஸ்டெம்பை உதைத்த கிளாசனுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி 2-வது ... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு ஆப்கன் வீரருக்கு அபராதம்..!

ஐசிசியின் விதிமுறைகளை மீறியதால் ஆப்கானிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபரூக்கிக்கு 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.ஐசிசி விதி 2.8இன் படி வீரரோ அல்லது வீரரின் உதவியாளர்களோ நடுவரின் தீர்... மேலும் பார்க்க

நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: ஆப்கன் வீரருக்கு அபராதம்!

களநடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆப்கானிஸ்தான் வீரர் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2-வது ஒருநாள் போட்டியின் ... மேலும் பார்க்க

‘துப்பாக்கிய பிடிங்க வாஷி’..! சுந்தருக்கு பதிலளித்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலளித்த அஸ்வினின் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓ... மேலும் பார்க்க

மீண்டும் கேப்டனாக களமிறங்கும் ரஷீத்கான்!

எம்ஐ கேப்டவுன் அணியின் புதிய கேப்டனாக ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய பிரீமியர் லீக் தொடர் போலவே உலகமெங்கிலும் 10, 20 ஓவர் தொடர்கள் அதிகளவில் பிரபலமாகிவிட்டன. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஐபி... மேலும் பார்க்க