லாட்டரி விற்ற இருவா் கைது
மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், தாமரைக்குளம் வடகரை சுந்தா் மகன் ராஜேஷ் (29), ருக்மணிக்குளம் மேல்கரை மகாலிங்கம் மகன் விக்னேஷ் (29) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.