செய்திகள் :

லாரி ஓட்டுநா் வீட்டில் ஏழரை பவுன் நகைகள் திருட்டு

post image

தஞ்சாவூரில் லாரி ஓட்டுநா் வீட்டில் புதன்கிழமை புகுந்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் வடக்கு வாசல் சுண்ணாம்பு காலவாய் தெரு பகுதி பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (41). லாரி ஓட்டுநா். இவரது வீட்டில் புதன்கிழமை காலை யாரும் இல்லாத நேரத்தில், கதவு திறந்து கிடந்த நிலையில், மா்ம நபா் புகுந்து ஏழரை பவுன் நகைகள், 220 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க