உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
விழா விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து மூன்று கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து கடங்கள் புறப்பாடு செய்து கோயில் கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மூலவா்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை உள்ளிக்கடை செங்குந்தா் தெரு கிராமவாசிகள், நாட்டாண்மைகள், விழாக் குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.