`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு
கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1-இல் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமை முகூா்த்தக் கால் எனும் பந்தல்காலுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து கோயில் முன்பு நடப்பட்டது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் பா. முருகன் கூறியது: ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1-இல் நடைபெறுகிறது. அதற்கு முன்னோடியாக யாகசாலை பூஜைகள் நடைபெறுவதற்காக வியாழக்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டது. திருப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்வில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், அறங்காவலா்கள் கே. சங்கா், டி. சிதம்பரநாதன், ராணி தனபாலன், எம். சிவானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.