திருமணம் என்ற கருத்தில் நம்பிக்கையில்லை..! மனம் திறந்த ஷ்ருதி ஹாசன்!
லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு
சுங்குவாா்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், தென்மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல்(45). மேஸ்திரியான சக்திவேல் தன்னுடன் வேலை செய்யும் சுமாா் 40 வயது பெண்ணுடன் ஸ்ரீபெரும்புதூா் நோக்கி சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டாா் பைக்கில் சென்றாா். சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னா் லாரி மோதியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானாா். அவருடன் வந்த அடையாளம் தெரியாத பெண் பலத்த காயம் அடைந்தாா். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சந்தவேலூா் பகுதியில் உள்ள அவசர சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானாா்.
உயிரிழந்த பெண் குறித்த விவரம் தெரியவில்லை.
விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.