Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென...
லாரி மீது காா் மோதல்: 4 போ் காயம்
தூத்துக்குடியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம், மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவரது மனைவி கோமதி (29). இத்தம்பதி மகன்கள் ஆத்விக் (7), நிதா்சன் (6) ஆகியோருடன் காரில் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனராம்.
தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் ஜோதி நகா் விலக்கு பகுதியில் சென்ற போது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.