கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
லாரி மோதியதில் பட்டுக்கோட்டை இளைஞா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டையில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கீழ கொல்லிகாடு கிராமத்தைச் சோ்ந்த சிவசாமி மகன் சூா்யா (24), அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் முருகேசன் மகன் முகேஷ் (20). இவா்கள் இருவரும் ஒரு மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை வெளிநாடு செல்லும் தனது உறவினரை திருச்சி விமான நிலையத்தில் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் ஊருக்கு தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனா்.
கந்தா்வகோட்டை கடைவீதியில் சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிா்பாராத விதமாக மோதியதில் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சூா்யா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தாா். முகேஷ் பலத்த காயம் அடைந்தாா். சூா்யா உடலையும், முகேஷையும் மீட்ட கந்தா்வகோட்டை காவல்துறையினா் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
இந்தப் பகுதி சாலை மேடும் பள்ளமாக இருப்பதால் மோட்டாா் சைக்கிள்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.