மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!
லாரி மோதி கூட்டுறவு ஊழியா் உயிரிழப்பு
தக்கலை அருகே புலியூா்குறிச்சியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி மோதியதில் கூட்டுறவு சங்க ஊழியா் உயிரிழந்தாா்.
அதே சமயம் எதிா் திசையில் வந்து கொண்டிருந்த இரு காா்கள் ஒன்றன்பின் ஒன்றாக கனரக லாரி மீது மோதியதில் காரில் இருந்த சிவகுமாா், முத்துகுமாா் ஆகிய இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் மோகன்தாஸ் (59) என்றும் தக்கலை வங்கிப் பணியாளா் கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அலுவலக பணி நிமித்தமாக பைக்கில் நாகா்கோவில் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் நின்றிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கனரக லாரி ஓட்டுநா், நாங்குனேரியை சோ்ந்த சங்கரலிங்கம்(35) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.