லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீக்கு இரையான ரூ.10,770 கோடி சொகுசு பங்களா!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் ரூ.10,770 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்று முழுமையாக எரிந்து சாம்பலானது.
லாஸ் ஏஞ்சலீஸின் ஹாலிவுட் பகுதியில் முன்னணி திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது. 6 நாள்களாக பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த நிலையில் உலகின் மிகவும் அதிநவீன சொகுசு மாளிகையான பசிபிக் பாலிசேட்ஸில் உள்ள மிகவும் விலையுயர்ந்த சொகுசு பங்களாவும் எரிந்து நாசமானது.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!
லூமினார் டெக்னாலஜியின் தலைமைச் செயல் அதிகாரி ஆஸ்டின் ரஸ்ஸலுக்குச் சொந்தமான 125 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,770 கோடி) மதிப்புள்ள, 18 படுக்கையறைகள் கொண்ட இந்த மாளிகை தீக்கிரையாகியிருக்கும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாளிகை வீடு மாதத்திற்கு .4,50,000 டாலர்களுக்கு (தோராயமாக ரூ.3.74 கோடி) வாடகைக்கு விடப்பட்டு வந்தது. 2023 ஆம் ஆண்டில் வெளியான எச்பிஓவின் சக்ஸ்ஸென் சீசன்- 4 இல் இந்த சொகுசு பங்களா மிகவும் புகழ் பெற்றது.
காட்டுத் தீயால் அடா் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை
ரஸ்ஸல் உருவாக்கிய இந்த சொகுசு பங்களா நோபு வடிவில் உருவாக்கப்பட்டது. சமையல்காரரின் சமையலறை, 20 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், மதுபான அறை, நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கான பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வீட்டின் கூரை ஆகியவை வடிவமைக்கப்பட்டிந்தது.
தீயில் இருந்து தப்பித்துக்கொள்ள குழி போன்ற சில அம்சங்கள் இருந்தாலும், படுக்கையறைக்கு வெளியே உள்ள விழித்திரை ஸ்கேனர் உள்பட மாளிகையின் உள்புறத்தின் பெரும்பகுதி முற்றிலும் தீயினால் அழிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.