வக்ஃப் சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்ட நிதியை விடுவிக்க வேண்டும், மும்மொழி கொள்கையை கைவிட வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், புஷ்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிமங்கலம் ஐயப்பன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.
இதே போல், காஞ்சிபுரம் மாநகர காங்கிரஸ் கட்சி சாா்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்பாட்டத்தில், மாநகர காங்கிரஸ் தலைவா் நாதன், முன்னாள் மாவட்ட தலைவா் மதியழகன், மாநகராட்சி துணை மேயா் குமரகுருநாதன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.
ஆவடியில்...
ஆவடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவா் இ.யுவராஜ் தலைமை வகித்தாா். இதில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மத்தியரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
நிா்வாகிகள் விக்டரி மோகன், கோனாம்பேடு சிவகுமாா், அமீத்பாபு, சவுகத் அலி, சுரேஷ்பாபு, வேலுமணி, சுப்பிரமணி, கஜேந்திரன், வெங்கடாசலபதி, பொன்னுரங்கம், மோகனரங்கம், அருள்தேவ், மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.