அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: வாஷிங்டன் சென்றடைந்தார் டிரம்ப்!
வங்கதேசத்தினா் ஊடுருவல்: மாநகரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
திருப்பூரில் வங்கதேசத்தினா் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து மாநகர போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், வெளிமாநிலத் தொழிலாளா்கள் என்ற பெயரில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களும் திருப்பூரில் பணியாற்றி வருவது அவ்வப்போது நடத்தப்படும் சோதனையின் மூலமாகத் தெரியவருகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக கடந்த 16 நாள்களில் 46 வங்கதேசத்தினா் கைது செய்யப்பட்டுள்ளனா். அதிலும் குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திருப்பூா் பின்னலாடை நிறுவன விடுதியில் ஒரு ஆண்டாகத் தங்கியிருந்து பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாநகரில் வங்கதேசத்தினா் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.