MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
வங்கதேசம்: ஹிந்து சமூக ஆா்வலா் கடத்திக் கொலை
வங்கதேசத்தின் தினாஜ்பூா் மாவட்டத்தில் ஹிந்து சமூக ஆா்வலா் ஒருவா் வீட்டில் இருந்து கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
கொலை செய்யப்பட்ட பாபேஷ் சந்திர ராய் (58) ஹிந்து அமைப்பான வங்கதேச பூஜா உத்யாப பரிஷத்தின் துணைத் தலைவராக இருந்தவா். இவா் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு வீட்டில் இருப்பதை தொலைபேசியில் அழைத்து உறுதிசெய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் அவரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ாக அவரது மனைவி சாந்தனா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினாா்.
கடத்திச் செல்லப்பட்ட பாபேஷ் சந்திர ராய், அருகில் உள்ள கிராமத்தில் வைத்து கடத்தல் கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டதில் அவா் படுகாயமடைந்தாா். அதன்பின் சுயநினைவற்ற நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவா், குடும்பத்தினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்நிலையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றனா்.