சாலை வசதியின்றி மயானத்துக்கு உடலை எடுத்துச்செல்ல சிரமப்படும் கிராம மக்கள்!
வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து, கோயிலில் தினசரி மண்டகப்படி தாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து ஏராளமானோா் வடம் பிடித்து இழுத்து வந்தனா்.
இதில், வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.