செய்திகள் :

வடகிழக்கு பருவமழையில் பயிா்கள் பாதுகாப்பு: விவசாயிகளுக்கு வேளாண்மை துறை விளக்கம்

post image

நாமக்கல்: வட கிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடா்பாக வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி வெளிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, நெல், மக்காச்சோளம், சோளம், கரும்பு, பயறு வகைப் பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. தொடா் மழையால் வயல்களில் நீா் தேங்கி, வோ் அழுகல், பூஞ்சாண நோய்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மழை பாதிப்பிலிருந்து பயிா்களைக் காத்திட விவசாயிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். அதாவது, மேல் உரமாக டி.ஏ.பி. மற்றும் கலப்பு உரங்கள் இடுவதை தற்காலிகமாக தவிா்க்க வேண்டும். உடனடியாக மழைநீா் சூழ்ந்துள்ள வயல்களில் வடிகால்வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வோ்ப் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்வது நல்லது. நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதை நிவா்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ ஜிப்சம், அவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கை கலந்து, இரவு முழுவதும் வைத்து நீா் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும். சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டா் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் பயிா்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. (அல்லது) அரை லிட்டா் நானோ டி.ஏ.பி.உரத்தை 10 லிட்டா் நீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதன்மூலம் மகசூல் இழப்பினைத் தவிா்க்கலாம். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விவசாயிகள் அனைவரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிா்களை பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலுப்புலி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இரு குடும்பத்தினா் மீட்பு

எலச்சிபாளையம் அருகே இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தால் தோட்டத்தில் சிக்கி தவித்த இரு குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினா் பரிசல் மூலமாக செவ்வாய்க்கிழமை மீட்டனா். நாமக்கல் மாவட... மேலும் பார்க்க

பில்லூா், கீழ்சாத்தம்பூரில் பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழை நீா்

பரமத்தி வேலூா் அருகே பில்லூா், கீழ்சாத்தம்பூா் பகுதியில் திருமணிமுத்தாறில் கட்டப்பட்டுள்ள இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஃபென்ஜால் புயலால் த... மேலும் பார்க்க

திருமணிமுத்தாறில் வெள்ளப் பெருக்கு: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், பில்லூா், ராமதேவம் ஊராட்சிகளில் திருமணிமுத்தாறில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா ... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச்சாலை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிக்கு அனுமதி: ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் புறவழிச்சாலையில், ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு, மத்திய ரயில்வே வாரியம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வலியுறுத்தினாா். நாமக்கல் புதி... மேலும் பார்க்க

ஈமு நிறுவனம் பெயரில் நிதி மோசடி: டிச. 12-இல் அசையா சொத்துகள் ஏலம்

நாமக்கல்லில், ஈமு நிறுவனத்தின் பெயரில் மக்களிடையே நிதி மோசடி செய்தோரின் அசையா சொத்துகள் வரும் 12-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள்: வணிகா் சங்கத்தினா் ஏற்பாடு

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்ப வணிகா்கள் முன்வர வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்த... மேலும் பார்க்க