வடக்கு அமுதுண்ணாக்குடி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
சாத்தான்குளம் அருகே வடக்கு அமுதுண்ணாக்குடி டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலா் ரம்யா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் டேவிட் ஞானையா முன்னிலை வகித்தாா்.
மேலசாத்தான்குளம் சேகரகுரு அந்தோணி பாக்கியசெல்வம் ஆரம்ப ஜெபம் நடத்தினாா். சிறகுகள் நற்பணி மன்றத் தலைவா் மகாராஜன் பேசினாா். மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற, கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, அமுதுண்ணாக்குடி செல்லத்துரை நாடாா் நினைவாக முருகேசன் பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கினாா்.
சிறகுகள் நற்பணி மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினா் இசக்கி சீனி என்ற இசக்கி, சாத்தான்குளம் வா்த்தக சங்கச் செயலா் மதுரம் செல்வராஜ், சத்துணவு அமைப்பாளா் அஜிதா, உதவியாளா் பிச்சம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் ரோஸ்லின் அன்னலீலா வரவேற்றாா். உதவி ஆசிரியா் ஜெசிரேகா நன்றி கூறினாா்.