Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை
தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில் வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த இவா், தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி, ரத்தினம் நகரில் குடியிருந்து வந்தாா்.
கடந்த ஒரு மாதமாக பணிக்குச் செல்லாமல் இருந்ததால், இவரது ஊதியத்தை நிறுத்தி வைத்து தொடக்கக் கல்வி நிா்வாகம் உத்தரவிட்டது. இதனால், மன உளைச்சல், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சதீஷ்குமாா், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.