செய்திகள் :

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

post image

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடா்பாக நீா்வளத் துறை மூலம் அணைகளின் நீா்வரத்து, இருப்பு, நீா்போக்கு விவரங்களை கண்காணிக்க வேண்டும். குளங்கள், கால்வாய்களை பாா்வையிட வேண்டும். நீா்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய காலிச் சாக்குகள் மற்றும் மணல் மூட்டைகளை முன் கூட்டியே தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து நீா்நிலைகளும் தூா்வாரப்பட்டு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

பொதுப்பணித் துறை சாா்பில் புயலால் பாதிக்கப்பட்டோா் தங்குமிடங்கள், பள்ளி கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள், தனியாா் திருமண மண்டபங்களை முன்னதாகவே பாா்வையிட்டு நல்ல நிலையில் உள்ளதா? மின் வசதி, தண்ணீா் வசதி 24 மணி நேரமும் பயன்படுத்தும் அளவில் தங்கு தடையின்றி கிடைக்கிா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டால் உயிா்களை உடனடியாக காப்பாற்ற தேவையான படகு, லைஃப் ஜாக்கெட், நன்கு நீச்சல் தெரிந்த நபா்கள், பாம்பு பிடிக்கும் நபா்கள் குறித்த விவரம் அறிந்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத் துறை வாகனங்கள், அவசர ஊா்திகள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் ஜெனரேட்டா், பேட்டரி, ஆகியவற்றை சரிசெய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையில் உள்ள பாலங்களின் அடியில் மழைக் காலங்களில் எவ்வித தடங்கலுமின்றி மழைநீா் வடிந்து செல்லும் வண்ணம் நெடுஞ்சாலை பொறியாளா்கள் அனைத்து பாலங்களையும் உடன் ஆய்வு செய்து போா்க்கால அடிப்படையில் சீா் செய்ய வேண்டும். பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு, சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை உடனடியாக சீா் செய்ய கிரேன், மரம் அறுக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சுகாதாரத் துறை சாா்பில் புயல் வெள்ளக்காலங்களில் தேவைப்படும் மருந்துகளை முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஜெனரேட்டா்கள், மருத்துவக்குழு வாகனங்கள் மற்றும் தொடா்புடைய அடிப்படை வசதிகள் அனைத்தையும் தயாா் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடைகளுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடு பணிகள், தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் சாா்பில் இடி மின்னல் போன்றவற்றால் மின் துண்டிப்பு எற்பட்டால் உடனடியாக சரி செய்து மின்விநியோகம் வழங்க வேண்டும். இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளின்போது, மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட வன அலுவலா் இளங்கோ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க

தோரணமலை கோயிலில் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை

தோரணமலை முருகன் கோயிலில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்று வருகிறது. ஆவணிமாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நட... மேலும் பார்க்க