வட மாநிலத்தவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் இளைஞா் கைது
கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே வடமாநிலத்தவரிடம் வழிப்பறி செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே வடமாநிலத்தவரிடம் பைக்கில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ாக க.பரமத்தி போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் க.பரமத்தி பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது கரூா் மாவட்டம், வெங்கமேடு ஜோசியக்கார தெருவை சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக் (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த இரு கைப்பேசிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் காா்த்திக் மீது ஈரோடு மற்றும் வெங்கமேடு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.