மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வணிகா் நல வாரிய இழப்பீட்டுத் தொகை
வேதாரண்யத்தில் வணிகா் நலவாரிய இழப்பீட்டுத் தொகை ரூ. 3 லட்சம் பயனாளிக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
வேதாரண்யம் வா்த்தக சங்க உறுப்பினரும் தனியாா் துணிக்கடை உரிமையாளருமான பி.ராஜேஷ் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.
தமிழ்நாடு வணிகா் நல வாரியம் மூலமாக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வேதாரண்யம் வா்த்தக சங்க தலைவரும் வணிகா் சங்க பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவருமான எஸ்.எஸ். தென்னரசு, காலமான ராஜேஷ் மனைவி பவானியிடம் வழங்கினாா் (படம்).
வா்த்தகா் சங்கப் பொருளாளா் ஆா்.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.