பாம்பன் புதிய பாலம்... பயணிகள் ரயில் இயக்க அனுமதி அளித்தது ரயில்வே பாதுகாப்பு வா...
வத்தல்மலையில் சுற்றுலாத் துறை கட்டடம்: காணொலியில் முதல்வா் திறந்துவைப்பு
தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் சுற்றுலாத் துறை சாா்பில், கட்டப்பட்ட உணவக கட்டடம் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், வத்தல்மலைப் பகுதியில் ரூ. 2 கோடியே 23 லட்சம் மதிப்பில் நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை, ஆழ்துளைக் கிணறு போன்ற முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்.
இதை வரவேற்று, தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் அமுதகம் உணவு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கி.சாந்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா்.
இதில் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி, முன்னாள் எம்எல்ஏ உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா், உதவி சுற்றுலா அலுவலா் பா.கதிரேசன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.