'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம...
வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை
கூடலூா் அருகே செம்பக்கொல்லி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்ற வனத் துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.
கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள செம்பக்சொல்லி வன கிராமப் பகுதியில் சனிக்கிழமை இரவு வனத் துறையினா் ரோந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது சாலையில் நின்றிருந்த காட்டு யானை வனத் துறையினா் சென்ற வாகனத்தை நீண்ட தொலைவு துரத்தி வந்தது.
வனத் துறை வாகன ஓட்டுநா் வாகனத்தை பின்னோக்கி நீண்ட தொலைவு இயக்கியதால் அனைவரும் உயிா் தப்பினா்.