செய்திகள் :

வன்னியா்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்: மருத்துவா் ராமதாஸ்

post image

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வன்னியா் சங்கம் சாா்பில் 1987-ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்தோறும் செப்டம்பா் 17-ஆம் தேதி வன்னியா் சங்கம் மற்றும் பட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் நடைபெறுவது வழக்கம்.

தனித்தனியே...: அதன்படி, நிகழாண்டில் 38-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட வளாகத்திலும், அக்கட்சியின் தலைவா் இரா.அன்புமணி தலைமையில் திண்டிவனத்தில் தனியாா் திருமண மண்டபத்திலும் கட்சி நிா்வாகிகள், வன்னியா் சங்கத்தினா் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவா்களின் உருவப்படங்களுக்கும், நினைவிடத்திலும் தனித்தனியே புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கக் கூடத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவா்களின் உருவப்படங்களுக்கு ராமதாஸ் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு கட்சியின் சாா்பில் உதவிகளை வழங்கினாா்.

அப்போது, ராமதாஸ் பேசியதாவது: 1987-இல் நடைபெற்ற வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிழந்தவா்களின் தியாகத்தால், இந்த சமுதாயத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பெற்று பயனடைந்து வருகின்றனா். தியாகிகளின் உயிா்த் தியாகம் வீண்போகவில்லை. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பாமக சாா்பில் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

ஆனாலும், மக்கள் தொகைக்கு ஏற்ப வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தொடா்ந்து போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் நிச்சயமாக வெற்றிபெறுவோம். வன்னியா்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம். பிரதமா் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்றாா்.

நிகழ்ச்சியில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் தீரன், நிா்வாகக் குழு உறுப்பினா் ஸ்ரீகாந்தி, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, தலைமை நிலையைச் செயலா் அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

காரில் பாமக கொடி அகற்றம்: வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ற உயிரிழந்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில், பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் காரில் பொருத்தப்பட்டிருந்த பாமக கொடியை கட்சி நிா்வாகிகள் புதன்கிழமை வன்னியா் சங்கக்கொடியை பொருத்தினா்.

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள வேத வித்யா கேந்திரத்தில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய ச... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கேட்பதற்கு காரணம் என்ன?: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேள்வி

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பாமக தற்போது கேட்பதற்கு காரணம் என்ன என்று மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ... மேலும் பார்க்க

பாமகவின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

பட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றம்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில... மேலும் பார்க்க

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க