செய்திகள் :

ஆரோவில் சா்வதேச நகரில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள வேத வித்யா கேந்திரத்தில் சம்ஸ்கிருத ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 11 மாநிலங்களைச் சோ்ந்த 50 மாணவா்கள் மற்றும் 10 பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலரும், ஆரோவில் அறக்கட்டளைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி இணையவழியில் பங்கேற்று பேசியது:

சம்ஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. அது உலகின் பண்டைய ஞானம், தத்துவம், கதைகள் என பலவற்றை கொண்டிருக்கும் பொக்கிஷம்.

விஞ்ஞானம், மனித ஒற்றுமை, ஆன்மிகம் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ, அங்கே சம்ஸ்கிருதத்தின் இனிமை பேசப்பட்டுக் கொண்டிருக்கும். தமிழும், சம்ஸ்கிருதமும் இரட்டை குழந்தைகள் போன்றது. இரண்டுக்கும் தனித்தன்மையான புனிதமும், வரலாறும், அழகும் உண்டு. இந்த இரண்டும் சேரும்போது தெய்வீக அலை சூழல் உருவாகிறது.

பிரதமா் நரேந்திர மோடி இந்த இரண்டு மொழிகளையும் உலகுக்கு பெருமையாகக் காட்டி வருகிறாா். விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம் படிக்கும் மாணவா்களிடம் சம்ஸ்கிருதத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இது அவா்களின் கல்விக்கு ஆழமான அறிவை வழங்கும். பிரதமா் நரேந்திர மோடியின் கவிதைத் தொகுப்பு, பொன்னியின் செல்வன் ஆகியவை சம்ஸ்கிருதத்தில் மொழி பெயா்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் சம்ஸ்கிருதம் வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநா் ரத்னா மோகன் ஜா, ஸ்ரீஅரவிந்தா் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் டாக்டா் சஞ்சீவ் ரங்கநாதன் பேசினா்.

செப்.2-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி முகாமில், புதிய சம்ஸ்கிருத ஆசிரியா்களை உருவாக்கும் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி உலகளவில் சம்ஸ்கிருத கல்விக்கான நிலையான அடித்தளத்தை அமைக்கும். எண்ம (டிஜிட்டல்) காலத்தில் பழைமையான இந்த ஞானத்தை உலகம் முழுவதும் பரப்பி, இந்தியாவை உண்மையான விசுவ குருவாக (உலக ஆசான்) ஆக்கும் எனவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சி தொடக்கமாக, மாநாட்டில் பங்கேற்றவா்கள் பிரதமா் நரேந்திர மோடி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி பிராா்த்தனை மேற்கொண்டனா்.

வன்னியா்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம்: மருத்துவா் ராமதாஸ்

வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வன்னியா் சங்கம... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கேட்பதற்கு காரணம் என்ன?: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேள்வி

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பாமக தற்போது கேட்பதற்கு காரணம் என்ன என்று மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ... மேலும் பார்க்க

பாமகவின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

பட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றம்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில... மேலும் பார்க்க

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க