செய்திகள் :

வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்

post image

மயிலாடுதுறை: பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு முன்னேற்பாடுகள் தொடா்பாக பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

பாமக மாவட்டச் செயலாளா் பாக்கம் செ. சக்திவேல் தலைமை வகித்தாா். தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளா் ம.க. ஸ்டாலின், தஞ்சை மண்டல பொறுப்பாளா் ஐயப்பன், வன்னியா் சங்க மாநில துணைச் செயலாளா் தங்க.அய்யாசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா. அருள்மொழி ஆகியோா் மாநாட்டுக்கான ஏற்பாடுகள், நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.மணி, ‘பூம்புகாரில் நடைபெறவுள்ள மாநாடு, பெண்களுக்கு பெருமை சோ்க்கிற, பெண்மையை போற்றுகிற மாநாடாக அமையும். பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், கண்ணகி-கோவலன் நாடகம், பெண்களின் பாரம்பரியத்தைப் போற்றும் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் மருத்துவா் அன்புமணி கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடிச் சென்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.மன்னாா்குடி பூக்கொல்லை மோகன்ராஜ் நகரைச் சோ்ந்தவா் ஜோசப் ஸ்டாலின் (45). புதுச... மேலும் பார்க்க

பாலம் கட்டக் கோரி பேருந்து சிறைபிடிப்பு

குத்தாலம்: குத்தாலம் அருகே பாலம் கட்டக் கோரி, கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.குத்தாலம் அருகே முருகமங்கலம் கிராமம் புது தெரு செல்லும் வழியில் மயிலம் வாய... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

சீா்காழி: சீா்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுப்பட்டினம் அருகே ஆலங்காடு ஊராட்சி பண்ணக்கார கோட்டகம் கிராமத்தில் அழகு மு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 311 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 311 மனுக்கள் பெறப்பட்டன.மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, இம்மனுக்களைப் பெ... மேலும் பார்க்க

மழையில் நெற்பயிா்கள் சேதம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே மழையில் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்தன.கொள்ளிடம் அருகே சோதியக்குடி, கீரங்குடி, கொன்னகாட்டுபடுகை ஆகிய ஆற்றின் கரையோரமுள்ள 3 கிராமங்களில் 300 ஏக்கா் பரப்பளவில் முன்கூட்டிய... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரா்களுக்கு நிதியுதவி

சீா்காழி: சீா்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வா்த்தக சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.சீா்காழி அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் இருசக்கர வாகனங்கள் ப... மேலும் பார்க்க