திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
வன்மம் தவிர்ப்போம்..! எம்.எஸ். தோனியின் அறிவுரை!
சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி ரசிகர்களுக்கு அழகான அறிவுரையைக் கூறியுள்ளார்.
உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் இந்திய கேப்டன், 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தோனியுடன் சஞ்சு சாம்சனும் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் தோனி இன்னும் சில ஆண்டுகள் சிஎஸ்கேவில் விளையாடுவதாக விருப்பம் தெரிவித்தார்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க சில அறிவுரைகளையும் தோனி தனது ரசிகர்களுக்காகக் கூறினார்.
தோனி பேசியதாவது:
மன்னிக்க பழகுங்கள். நம்மில் பலருக்கும் இந்தப் பழக்கம் இல்லை. நாம் வாழ்க்கையில் மிகுந்த பழிவாங்குபவர்களாக மாறியுள்ளோம். யாரவது ஒன்று சொன்னால் நாம் அதற்கு இன்னொன்று சொல்லுகிறோம். மன்னியுங்கள், அதை கடந்து சென்று வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சண்டையிட்டுக் கொள்வது கவனிக்கத்தக்கது.
கடந்தாண்டு ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை அவமரியாதையாக நடத்தியதிற்கு இந்தாண்டு பழிவாங்க வேண்டுமென பல சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.