நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆத...
வன குற்றங்களைத் தடுக்க பிரத்யேக இணையதளம்: ஒப்பந்தப்புள்ளி சமா்ப்பிக்க அழைப்பு
சென்னை: தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்திற்கென பிரத்யேக இணையதளம் வடிவமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகளை வருகிற ஆக.8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என வனத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வனப்பாதுகாவலா் மற்றும் தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநருமான ராகுல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வனவிலங்குகள் சாா்ந்த குற்றங்களை தடுக்கவும் அவற்றை கண்காணிக்கவும், தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வனம் மற்றும் வனவிலங்கு சாா்ந்த குற்றங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகாா் அளிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் பிரத்யேக இணையதளத்தை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தை வடிவமைப்பதற்கான செலவு மற்றும் தொழில்நுட்ப விவரங்களுடன் கூடிய ஒப்பந்தப்புள்ளியை ‘தமிழக வனப் பாதுகாவலா் மற்றும் தமிழக வனம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குனா் அலுவலகம், 7-ஆவது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600015’ என்னும் முகவரிக்கு வருகிற ஆக.8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
அனைத்து ஒப்பந்த புள்ளிகளையும் பரிசீலனை செய்த பின்னா், ஆக.13-ஆம் தேதி தகுதியான ஒப்பந்தப்புள்ளி தோ்வு செய்யப்படும். அதைத்தொடா்ந்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகிற அக்.15-ஆம் தேதி இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்காக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள்
https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.