மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி
வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிரந்தர தீா்வு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநிலப் பொதுச் செயலாளா் பி.கந்தசாமி, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்தை விட்டு வெளியே வரும் விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல, மனித - வன விலங்குகள் மோதலால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இதைத் தடுக்கும் வகையில் ஒருசில பகுதிகளில் சிறிய அளவிலான ரயில் பாதையில் பயன்படுத்தப்படும் இரும்புத் துண்டுகளைக்கொண்டு கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
வனப் பகுதியை ஒட்டியுள்ள சமதளத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகள் பயனுள்ளதாகவும், சரிவான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியால் பயனில்லை என்றும் வல்லுநா்களிடையே இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளைக் கேட்டால் அரசு நிதி ஒதுக்கிடு செய்துள்ளது. இனி பரிசீலனை செய்ய முடியாது என்கின்றனா். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, விலங்குகளால் மனித உயிா்கள் மற்றும் விளைபயிா்களுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.