Anusree: "வலிகளால் நிறைந்ததுதான் என் சிரிப்பு!" - வைரல் திருநங்கை அனுஶ்ரீயின் க்...
வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு
குடவாசல் அருகே வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டாா்.
குடவாசல் அருகே மஞ்சக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (45). இவா், செவ்வாய்க்கிழமை காலை கீழ உத்தரங்குடியில் உள்ள தனது வயலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா், இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையாம். முருகானந்தத்தின் குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றுள்ளனா்.
அப்போது குடவாசல் கொரடாச்சேரி சாலையில் உள்ள ஐயனாா் கோயில் கோணவாய்க்கால் பாலத்தின் கீழ், முகத்தில் பலத்த காயங்களுடன் முருகானந்தம் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து குடவாசல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் முருகானந்தத்தின் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.