செய்திகள் :

வரத்து குறைவால்: மீன்கள் விலை உயா்வு

post image

நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பிய படகுகளில் மீன்கள் குறைவாக இருந்ததால், மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், கல்லாா், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா். கடந்த வாரம் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினா்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் பிரியா்கள், உள்ளூா் வியாபாரிகள், வெளி மாவட்ட மற்றும் மாநில வியாபாரிகள் ஏராளமானோா் மீன்பிடித் துறைமுக இறங்குதளத்தில் குவிந்தனா். ஆனால், கடலுக்குச் சென்று திரும்பிய மீனவா்களுக்கு போதுமான மீன்கள் வலையில் சிக்கவில்லை. மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்கள் விலை கணிசமாக உயா்ந்தது. எனினும், விலையைப் பொருட்படுத்தாமல் மக்கள் மீன்களை வாங்கிச் சென்றனா்.

மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விலை, வஞ்சிரம் ரூ. 600, புள்ளி நண்டு ரூ. 650, கண் நண்டு ரூ. 400, வெள்ளை வாவல் ரூ. 800, கருப்பு வாவல் ரூ. 650, ஏற்றுமதி ரக வாவல் ரூ. 1200, சங்கரா ரூ. 450, பாறை ரூ. 400, கடல் விரா ரூ. 650, இறால் ரூ. 300 முதல் ரூ. 650, பெரிய கனவா ரூ. 500, சிறிய வகை கனவா ரூ. 200 முதல் ரூ.400, சீலா ரூ. 450 கிழங்கான் ரூ.400, நெத்திலி ரூ. 300-க்கும் விற்பனையாகின.

பெருந்தோட்டம் விஸ்வநாதா், லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

பூம்புகாா்: பெருந்தோட்டம் காசி விஸ்வநாதா் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவா... மேலும் பார்க்க

காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை (பிப்.12) முதல் மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவனத்தின் ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை: 6 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிமங்கலம் மாயனூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரிக்கை

பொறையாரில் உள்ள திறந்தவெளி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க