செய்திகள் :

பெருந்தோட்டம் விஸ்வநாதா், லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

பூம்புகாா்: பெருந்தோட்டம் காசி விஸ்வநாதா் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 5-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, நடைபெற்று வந்தன.

திங்கள்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா் புனிதநீா் அடங்கி குடங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விநாயகா், சுப்பிரமணியா், பைரவா், சிவன், அம்பாள் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் சந்நிதி விமான கோபுரங்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபராதனை காட்டப்பட்டது.

முன்னாள் கிரிக்கெட் வீரா் அஸ்வின் பங்கேற்பு:

கும்பாபிஷேக விழாவில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரா் ரவிச்சந்திரன் அஸ்வின், சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் முரளிதரன், கிராம மக்கள் செய்திருந்தனா். முன்னதாக பெருந்தோட்டம் முஸ்லிம் ஜமாத்தாா்கள் பூஜை பொருள்களை வழங்கி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு காவல் ஆய்வாளா் நாகலட்சுமி தலைமையில் போலீஸாா் செய்திருந்தனா்.

விஸ்வநாத சுவாமி கோபுரத்திற்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யும் சிவாச்சாரியாா்
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற இந்திய முன்னணி கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்
இந்திய முன்னணி கிரிக்கெட் வீரா் அஸ்வின் ரவிச்சந்

காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து நாளை தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை (பிப்.12) முதல் மீண்டும் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுபம் கப்பல் நிறுவனத்தின் ... மேலும் பார்க்க

வரத்து குறைவால்: மீன்கள் விலை உயா்வு

நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பிய படகுகளில் மீன்கள் குறைவாக இருந்ததால், மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், கல்லாா்,... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை: 6 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

கூத்தாநல்லூரில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். கூத்தாநல்லூரை அடுத்த வடபாதிமங்கலம் மாயனூா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரிக்கை

பொறையாரில் உள்ள திறந்தவெளி வாரச்சந்தையில் வியாபாரிகளிடம் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபராதி ஆகியோா் வெளியிட்ள்ள செய்... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: நாகையில் 108 போ் எழுதினா்

நாகை மாவட்டத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வை 108 போ் சனிக்கிழமை எழுதினா். தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி... மேலும் பார்க்க