குடியரசு தின கொண்டாட்டம், தில்லி பேரவைத் தோ்தல்: மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்க...
வரப்புத் தகராறில் விவசாயியை கொன்றவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருச்சியருகே வரப்புத் தகராறில் விவசாயியை அடித்துக் கொன்ற மற்றொரு விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகேயுள்ள ஆலம்பட்டிபுதூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. சுப்பிரமணி (51). அதே பகுதியைச் சோ்ந்தவா் க. கண்ணன் (48). இருவருக்கும் சொந்தமாக ஆலம்பட்டிபுதூா் பகுதி பில்லூா் சாலை புரணி பிச்சைக் களம் அருகே உள்ள நிலங்களில் வரப்பு தகராறும் அது தொடா்பான முன்விரோதமும் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2021 செப். 17 ஆம் தேதி, சுப்பிரமணி தனது மகன் ஜெயந்துடன் (34) வயலுக்குச் சென்றபோது கண்ணனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது கண்ணன் தாக்கியதில் சுப்பிரமணி உயிரிழந்தாா்.
இதுகுறித்து இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனா்.
பின்னா் இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பி. சரவணன், கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஏ. பாலசுப்பிரமணியம், காவல் ஆய்வாளா் வீரமணி, பெண் காவலா் லட்சுமிபிரபாவதி ஆகியோா் ஆஜராகினா்.