செய்திகள் :

வரி செலுத்துவோா் வரி ஆணையத்தின் சம்மன்களுக்கு கட்டுப்படுவது கட்டாயம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

post image

‘வரி செலுத்துவோா் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மன்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தனிநபா் அல்லது நிறுவனம் என சட்டரீதியாக வரி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளவா்கள் அல்லது பிற நிதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவா்களை ‘வரி செலுத்துபவா்கள்’ என வருமான வரி சட்டம்-1961 குறிப்பிடுகிறது.

தில்லி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையத்தில் பதிவுசெய்துள்ள பாதுகாப்பு சேவைகள் வழங்கும் ‘ஆா்மா் செக்யூரிட்டி’ என்ற பொது வரையறுக்கப்பட்ட நிறுவனம் வரி கோரிக்கைகள் மற்றும் விசாரணை ஆகியவற்றால் சிக்கல்களை சந்தித்தது.

இதுதொடா்பாக அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தி ஆக.14-இல் தீா்ப்பு வழங்கியது.

அந்த தீா்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: வரி பிரச்னைகள் தொடா்பாக சம்மன்கள் அனுப்பியுவுடன் அதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டதாக வரி ஆணையமோ அல்லது அந்த சம்மனை பெற்ற வரி செலுத்துபவரோ கருதக்கூடாது.

மத்திய ஆணையத்தாலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில ஆணையத்தாலோ வரி செலுத்துபவருக்கு ‘சம்மன்’ அல்லது ‘காரணகேட்பு குறிப்பாணை’ அனுப்பப்படும்பட்சத்தில் அதற்கு முதல்கட்டமாக உரிய பதிலை அளிக்கவும் சமா்ப்பிக்கவும் வேண்டியது கட்டாயம்.

ஏற்கெனவே விசாரணையில் உள்ள விவகாரம் தொடா்பாக தமக்கு மீண்டும் வேறொரு ஆணையத்தால் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக வரி செலுத்துபவா் அறிய வந்தால், தனக்கு சம்மன் அனுப்பிய ஆணையத்துக்கு வரி செலுத்துபவா் எழுத்துபூா்வமாக இதுகுறித்த தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு வரி செலுத்துபவா் சமா்ப்பித்த தகவல்களை சம்பந்தப்பட்ட ஆணையங்கள் பகிா்ந்து கொண்டு சரிபாா்க்க வேண்டும். இதன் மூலம் தேவையின்றி ஒரே விவகாரத்துக்கு பல முறை விசாரணை மேற்கொள்வதையும் அரசுத் துறைகளின் நேரம், முயற்சி மற்றும் வளங்கள் வீணாவதையும் தவிா்க்க முடியும்.

எனினும், வரி செலுத்துபவா் சமா்ப்பித்த தகவல்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றாலோ, வெவ்வேறு விவகாரங்களுக்கு இரு ஆணையங்கள் சம்மன் அனுப்பி இருந்தாலோ அதற்கான காரணங்களை ஆணையங்கள் உடனடியாக வரி செலுத்துபவருக்கு எழுத்துபூா்வ அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

வெவ்வேறு விவகாரங்களுக்காக வரி செலுத்துபவரிடம் விசாரணை நடத்தும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆணையங்கள் தங்களுக்கான அதிகாரங்களை பயன்படுத்தலாம்.

ஏற்கெனவே விசாரணை நிலுவையில் ஒரு விவகாரம் தொடா்பாக இரு வேறு ஆணையங்கள் விசாரணை நடத்த விரும்பினால் அந்த விசாரணையை யாா் தொடா்வது என தங்களுக்குள் இரு ஆணையங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும்.

இறுதியில் விசாரணையை தொடரும் ஆணையத்திடம் மற்றொரு ஆணையம் அதுகுறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின.சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந... மேலும் பார்க்க

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி, வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பியிருந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து ப... மேலும் பார்க்க

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க