இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாடானையில் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் மனுக்களுக்குத் தீா்வு காண போதிய கால அவகாசம் வழங்காமல் அவசர கதியில் முடிவெடுக்க அழுத்தம் தருவதைத் தவிா்க்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை 25 சதவீதம் உயா்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் வட்டாட்சியா் ஆண்டி, வருவாய்த் துறையினா், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

