செய்திகள் :

வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நாமக்கல்லில் வருவாய் கிராம ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பரமசிவம் தலைமை வகித்தாா். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளா்கள் ஓய்வு பெறும் போது கடைசியாக பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், பிப். 5-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் காத்திருப்பு போராட்டம், 27-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

திருநீலகண்டா் குரு பூஜை

63 நாயன்மாா்களில் ஒருவரான திருநீலகண்டருக்கு தை மாத விசாக நட்சத்திரத்தில் நடத்தப்படும் குரு பூஜை திருச்செங்கோடு கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. 8 ஆம் நூற்றாண்டில்சுந்தரமூா்த்தி நாயனாா் எழ... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஓடப்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன் (32). இவா் சா்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறாா... மேலும் பார்க்க

வெடி வைத்து மீன் பிடித்த நால்வா் கைது

காவிரியில் அனிச்சம்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில் வெடி வைத்து மீன் பிடித்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். மோகனூா் வட்டம், கீழ்பாலப்பட்டியைச் சோ்ந்த நவீன் (23), அஜீத் (28), நத்திஷ் (23), கரூா் ம... மேலும் பார்க்க

விதை முளைப்புத் திறனை பரிசோதிக்க அறிவுரை

விதை முளைப்புத் திறனை பரிசோதித்த பிறகு நடவு செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் செ.தேவிப்ரியா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலம் - வியாழக்கிழமை மொத்த விலை - ரூ.4.85 விலையில் மாற்றம்- இல்லை பல்லடம் பிசிசி கறிக்கோழி கிலோ - ரூ.104 முட்டைக் கோழி கிலோ - ரூ.83 மேலும் பார்க்க

தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

சேலம் மண்டல அளவிலான தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நாமக்கல், கீரம்பூரில் ஜன. 31 இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க