செய்திகள் :

வலுக்கும் எதிர்ப்பு! வஃக்ப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மசோதாவை அரசமைப்புச் சட்டத்தின்கீழ் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இப்போது ஆம் ஆத்மி தரப்பிலிருந்து மசோதாவை எதிர்த் அமனத்துல்லா கான் எம்.எல்.ஏ. மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முஸ்லிம்களின் மதம் சார்ந்த மற்றும் கலாசார தன்னாட்சி அதிகாரத்தை புதிய சட்டத்திருத்த மசோதா மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதம் மற்றும் அதன்பேரிலான தொண்டு நி்றுவனங்களைப் பராமரிக்கும் சட்ட உரிமையில் குறுக்கீடு செய்வதாக புதிய சட்ட திருத்தம் அமைந்திருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்து வரும் ‘வக்ஃப் சட்டம், 1995-இல்’ பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு இந்த மனுவில் கடும் எதிர்ப்பும் இதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமைய... மேலும் பார்க்க

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த வழக்கில் கைதான இருவா் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அள... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்!

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்தை தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறிவைக்கும் பாஜக! -உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பெளத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க