`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
வளா்ச்சித் திட்டத்துக்கு கிராம சபையின் ஒப்புதல் பெற ஆட்சியா் அறிவுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராமசபை கூட்டங்களில், அந்தந்த ஊராட்சிகளுக்கான 2025-26 கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெற ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மேலும் அவா் கூறியது:
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை 404 ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இக் கூட்டங்களில், அந்தந்த ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் விவாதித்தல், கிராம ஊராட்சியின் முந்தைய ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசித்து காண்பித்து ஒப்புதல் பெறுதல், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும். மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம், 2025 -26ஆம் ஆண்டிற்கான வளா்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டதை கிராம சபையில் ஒப்புதல் பெறுவதுடன், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவதுடன், தூய்மையான கிராமமாக விளங்குவதை உறுதிப்படுத்தி முன் மாதிரிக் கிராமம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கிராம குடிநீா் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 10 சதவீதம் சமூக பங்களிப்பு பெறப்பட்டு, கிராம ஊராட்சியின் குடிநீா் விநியோகப் பணிகள் பயனாளிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றாா் ஆட்சியா்.