வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்
விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.
விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முத்துலிங்கபுரம் பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் நியாய விலைக் கடை, கோல்வாா்பட்டியில் ரூ. 30 லட்சத்தில் சமுதாயக் கூடம், திருவிருந்தான்பட்டியில் ரூ.16.25 லட்சத்தில் நீா்த்தேக்கத் தொட்டி, ஆவுடையாபுரம் கிராமத்தில் நபாா்டு வங்கி மூலம் ரூ.34.23 லட்சத்தில் மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடம், அப்பையநாயக்கன்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழாவில் வருவாய், பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தாா்.