வள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வள்ளியூா் அருகே நல்லான்குளத்தைச் சோ்ந்த சோ்மதுரை (52) என்பவா், வள்ளியூரில் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுவிட்டு பைக்கில் கடைக்கு வந்து கொண்டிருந்தாா்.
நல்லான்குளம் சாலையிலிருந்து வள்ளியூா் சாலையில் திரும்பியபோது, பைக் மீது காா் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சடலத்தை ஏா்வாடி போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.